பெரம்பலூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
பெரம்பலூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணி நேர விரிவுரையாளர்கள் நேற்று 3-வது நாளாக தங்களது பணிகளை புறக்கணித்து 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டம் இரவிலும் நீடித்தது.
Related Tags :
Next Story