பெரம்பலூர் அரசு கல்லூரியில் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
பெரம்பலூர்-துறையூர் சாலையில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான முதுகலை மாணவர் சேர்க்கைக்கான எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.காம். வணிகவியல், எம்.எஸ்.டபிள்யூ. சமூகப்பணி ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வும், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பம், மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்கள், நகல் 5 பிரதிகள், பாஸ்போர்ட்டு புகைப்படம்-5 எடுத்து கொண்டு தங்கள் பெற்றோர்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். கலந்தாய்வில் தேர்வு பெற்றவர்கள் சேர்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும், என்று கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.