பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் - முக்கிய குற்றவாளியின் மனைவி அதிரடி கைது


பெரம்பூர் நகைக்கடை கொள்ளை சம்பவம் - முக்கிய குற்றவாளியின் மனைவி அதிரடி கைது
x

முக்கிய குற்றவாளியான கங்காதரனின் மனைவி கீதா மற்றும் அவரது உறவினர் ராகேவேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,

பெரம்பூரில் நகைக்கடை ஷட்டரை உடைத்து 9 கிலோ தங்கம் மற்றும் 20 லட்ச மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தனிப்படை போலீசார் நால்வரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய குற்றவாளியான கங்காதரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், கங்காதரனின் மனைவி கீதா மற்றும் அவரது உறவினர் ராகேவேந்திரா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 50 பவுன் (400 கிராம்) தங்க நகைகள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இதுவரை இந்த வழக்கில் 5 கிலோ வரையிலான தங்கத்தை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story