பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைப்பு
பெரியார் நினைவு சமத்துவபுரம் புனரமைப்பு
உடுமலை
உடுமலை அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ரூ.42 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
பெரியார் நினைவு சமத்துவபுரம்
உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் பாலப்பட்டி அருகே பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இந்த சமத்துவபுரம் கடந்த 2001-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு மொத்தம் 100 வீடுகள் உள்ளன. அத்துடன் தார்சாலைகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சமுதாய நலக்கூடம், நூலகம், பகுதிநேர ரேஷன் கடை, குடிநீர் வசதிஉள்ளிட்ட வசதிகள் உள்ளன.
இந்த சமத்துவபுரத்தில் புனரமைப்பு பணிகளை செய்வதற்கு தமிழக அரசு சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. அதன்படி ரூ.23 லட்சத்து 90 ஆயிரம் செலவில் தார்சாலை புனரமைக்கப்பட உள்ளது. சமுதாய நலக்கூடத்திற்கு ரூ. 4லட்சத்து 47ஆயிரம், நூலகத்திற்கு ரூ.1 லட்சத்து 55ஆயிரம், பகுதிநேர ரேஷன்கடைக்கு ரூ.2லட்சத்து 9ஆயிரம், குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு ரூ.1லட்சத்து 57ஆயிரம், அங்கன்வாடி மையத்திற்கு ரூ.1லட்சம், விளையாட்டு மைதானத்திற்கு ரூ.2லட்சத்து 50ஆயிரம், புதியதாக ஒருவீடுகட்டுவதற்கு
ரூ.4லட்சத்து 50ஆயிரம் என மொத்தம் ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் புனரமைப்பு பணிகளுக்காக சிறப்புநிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து இந்த புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
புனரமைப்பு பணிகள்
இந்த சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை புனரமைக்கவும் அரசு சிறப்புநிதி ஒதுக்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு வீட்டிற்கும் புனரமைப்பு பணிகளுக்காகதலா ரூ.50ஆயிரம் வழங்கப்படும். இந்த வீடுகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தந்த வீடுகளில் கட்டிட தொழிலாளர்களை ஏற்பாடு செய்து பணிகளை செய்து வருகின்றனர். பணிகள் முடிந்ததும், அந்த பணிகள் செய்துள்ளதற்காக தலா ரூ.50ஆயிரம் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.மணிகண்டன் தெரிவித்தார்.
---
செய்திக்குள் படம் 2 காலம்
உடுமலை பாலப்பட்டி அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம்