பெரியகுளம் பகுதியில்வரி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு


பெரியகுளம் பகுதியில்வரி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 13 Oct 2023 12:15 AM IST (Updated: 13 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் பகுதியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

தேனி

பெரியகுளம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உடனடியாக செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையர் கணேஷ் கேட்டு கொண்டார். இதைத்தொடர்ந்து தினமும் நகராட்சி பணியாளர்கள் 30 வார்டுகளுக்கும் சென்று 2023- 24-க்கான வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி, தொழில்வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், வரி வசூலிப்போர் கொண்ட குழுவினர் நகராட்சி பகுதியில் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட காலமாக வரி செலுத்தாத குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட 5 இணைப்புகளை துண்டித்தனர்.


Next Story