நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம் வாகனம் மோதி உடைந்ததா? போலீசார் விசாரணை


நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம்  வாகனம் மோதி உடைந்ததா? போலீசார் விசாரணை
x

நாமக்கல்லில் பெரியார் சிலை சேதம் வாகனம் மோதி உடைந்ததா? போலீசார் விசாரணை

நாமக்கல்

நாமக்கல் பிரதான சாலையில் அ.தி.மு.க. சார்பில் கடந்த 1993-ம் ஆண்டு பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டது. இந்த சிலைகளுக்கு தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த சிலையை சுற்றிலும் அரசு உத்தரவுபடி இரும்பு கூண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை பெரியார் சிலை மட்டும் சேதமாகி இருப்பதை கண்டு அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் அங்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அந்த சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதா? இல்லையெனில் வாகனம் மோதி சேதம் அடைந்ததா? என்பதை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே பெரியார் சிலை சேதம் அடைந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால் அங்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் கூடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதாலும், பகலில் சம்பவம் நடைபெற்று இருப்பதாலும் வாகனம் மோதி சிலை சேதம் அடைந்து இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story