"ராஜாஜி இறந்த போது துக்கம் தாங்காமல் அழுதவர் பெரியார்" - நடிகர் சிவக்குமார்


ராஜாஜி இறந்த போது துக்கம் தாங்காமல் அழுதவர் பெரியார் - நடிகர் சிவக்குமார்
x

பெரியாரும் ராஜாஜியும் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார்கள் என்று நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம் சூலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க 15-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், முன்னாள் மாணவர்கள் சங்க 15-ஆம் ஆண்டு விழாவில் நடிகர் சிவக்குமார் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

பெரியாரும் ராஜாஜியும் வள்ளுவர் கூறியது போல் நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தார்கள். ராஜாஜி இறந்த போது துக்கம் தாங்காமல் அழுதவர் பெரியார்.மேலும், ஈகை பண்பை தான் இறக்கும்வரை கலைவாணர் பின்பற்றினார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


1 More update

Next Story