பெரியார் பிறந்த நாள் விழா


பெரியார் பிறந்த நாள் விழா
x

உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள சமத்துவபுரத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி.ஜெயராமன் தலைமையில் அவைத்தலைவர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் அறிவழகன், ஒன்றிய செயலாளர் ஏ.ஒ.பெரியபாண்டி, செல்லராஜ், ராமகிருஷ்ணன் நகர் செயலாளர் ஜெ.டி.குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் புலிப்பாண்டி மகேந்திரன், வக்கீல் அணி அமைப்பாளர் உதயராஜன், ஏழுமலை காளிதாஸ், டி.கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி ஜெயபாலன், கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அதேபோல் மதுரை மாவட்டம் திராவிடர் கழகம் பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர் மன்னன், நகர தலைவர் ஏ.பவுன்ராஜ், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, மாவட்ட துணை தலைவர் சிங்கராஜ், ஆசிரியர் அணி சுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விவசாய அணி மாநில துணைச்செயலாளர் சி.தென்னரசு, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மாரி, மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, பண்ணை பாண்டி, மகளிர் அணி பாண்டீஸ்வரி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி பெரியார் நினைவு சமத்துவபுரம், சந்தை வாசல் உள்ளிட்ட இடங்களில் திராவிட கழகம் சார்பாக நடந்த விழாவிற்கு மாவட்ட காப்பாளர் தனபாலன் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். உசிலை மாவட்ட தலைவர் எரிமலை, மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ.பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி செயலாளர் தமிழ்மணி வரவேற்றார். மகளிர் அணி மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். வாடிப்பட்டியில் அ.தி.மு.க சார்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். தி.மு.க சார்பாக போடிநாயக்கன்பட்டி குப்புசாமி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வக்கீல் சந்திரசேகரன் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்.


Related Tags :
Next Story