பெரியவடகம்பட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழா:


பெரியவடகம்பட்டி மகாமாரியம்மன் கோவில் திருவிழா:
x

பெரியவடகம்பட்டி மகா மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம்

ஓமலூர்:

ஓமலூர் அருகே உள்ள டேனிஸ்பேட்டை ஊராட்சி பெரியவடகம்பட்டி பகுதியில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடைபெற்றது.

இதையொட்டி கடந்த 10-ந் தேதி கம்பம் நடப்பட்டு திருவிழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகளுடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாரியம்மனுக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், வேப்பிலை கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று பக்தர்கள் அலகு குத்துதல் நிகழ்ச்சி, வண்டி வேடிக்கை நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராடுதல், எருதாட்டம் போன்றவை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வேப்பிலை கரகம் வரும்போது அதே பகுதியை சேர்ந்த இருவர் கேரளா மேளம் அடிக்கும் இடத்தில் ஆட்டம் போட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story