ஒரே மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க அனுமதி


ஒரே மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க அனுமதி
x

‘நேஷனல் பெர்மிட்’ லாரிகள், ஒரே மாநிலத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து உள்ளது.

நாமக்கல்

நாமக்கல்:

தொழில் நிறுவனங்கள் பாதிப்பு

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இயக்குனர் பியூஸ் ஜெயின், அனைத்து மாநில அரசு செயலாளர்கள் மற்றும் போக்குவரத்து கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் பல மாநிலங்கள் 'நேஷனல் பெர்மிட்' லாரிகளை மாநிலங்களுக்குள் சரக்குகளை எடுத்து செல்ல அனுமதிப்பது இல்லை. அதனால் இரும்பு, சிமெண்டு போன்ற அத்தியாவசிய பொருட்களை தொடர்ச்சியாக எடுத்துச்செல்லும் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்துக்கு வந்து உள்ளது.

அனுமதி

மோட்டார் வாகன சட்டத்தின்படி 'நேஷனல் பெர்மிட்' என்பது, இந்தியாவின் எல்லை முழுவதும் அல்லது குறிப்பிட்ட சில மாநிலங்களில் சரக்கு லாரிகள் இயக்குவதற்கு வழங்கப்படும் உரிமையாகும். மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி 'நேஷனல் பெர்மிட்' பெற்ற வாகனங்கள், சம்பந்தப்பட்ட மாநிலத்தால் கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒரே மாநிலத்தில் உள்ள 2 இடங்களுக்கு இடையில் பொருட்களை ஏற்றிச்சென்று இறக்கலாம்.

குறிப்பிட்ட மாநிலத்தில் சரக்குகளை எடுத்து செல்வதை கட்டுப்படுத்துவது, அத்தியாவசிய பொருட்களின் இயக்கத்தை பாதிக்கிறது. இந்த விதியை தளர்த்தி இருப்பதால் சரக்குகளை எளிதாக நகர்த்துவதற்கும், எளிதாக வணிகம் செய்யவும் உதவும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் பகுதிகளில் நிபந்தனைகளை தளர்த்தி, மாநிலங்களுக்கு உள்ளேயே சரக்குகளை எடுத்து செல்லவும், இறக்கவும் நேஷனல் பெர்மிட் லாரிகளை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story