பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
லத்தேரி அருகே பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேலூர்
லத்தேரியை அடுத்த அன்னங்குடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி அங்குரார்ப்பணம், கோபூஜை, பூர்ணாஹூதி, யாத்திராதானம் நடந்தது. தொடர்ந்து மூலவர் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து இருந்தனர்.
கே.வி.குப்பம் தாலுகா கீழ்புதூர் கிராமத்தில் வித்யாகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மூலிகைகளைக் கொண்டு கணபதி யாகம் நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story