பெத்த பெருமாள் சுவாமி கோவில் தேரோட்டம்


பெத்த பெருமாள் சுவாமி கோவில் தேரோட்டம்
x

அரிமளம் அருகே பெத்த பெருமாள் சுவாமி கோவில் ேதரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

புதுக்கோட்டை

பெத்த பெருமாள் சுவாமி கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே கீழாநிலை கோவில்பட்டி கிராமத்தில் பெத்த பெருமாள் சுவாமி கோவில், காடேரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று வந்தது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பெத்த பெருமாள் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமிக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் கோவில் நிலையை ேதர் வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story