கொல்லிமலையில் பழுதான சாலையை சீரமைக்க கோரி ஜமாபந்தியில் மனு


கொல்லிமலையில்  பழுதான சாலையை சீரமைக்க கோரி ஜமாபந்தியில் மனு
x

கொல்லிமலையில் பழுதான சாலையை சீரமைக்க கோரி ஜமாபந்தியில் மனு

நாமக்கல்

நாமக்கல்:

கொல்லிமலை வெள்ளக்கல் ஆறு பஸ் நிலையத்தில் இருந்து ஊர்முடிபட்டி வரை செல்லும் சாலை கடந்த 4 ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுதொடர்பாக சேலூர் நாடு ஊராட்சி மன்ற நிர்வாகம், கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைகின்றனர்.

எனவே உடனடியாக தமிழக அரசு தலையிட்டு வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி வரை உள்ள சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கொல்லிமலையில் நடந்த ஜமாபந்தியில் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம், இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story