இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு


இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
x

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

நாமக்கல்


ராசிபுரம் தாலுகா ஆண்டகளூர்கேட் அருகே உள்ள கொழிஞ்சிப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

கொழிஞ்சிப்பட்டி அருந்ததியர் தெருவில் 100 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடுகள் இல்லை. மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில் வசித்து வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் மயானத்திற்கு ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story