கைத்தறி நெசவாளர்களை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு


கைத்தறி நெசவாளர்களை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு
x

கைத்தறி நெசவாளர்களை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

ஈரோடு

சென்னிமலை

கைத்தறி நெசவாளர்களை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம்

ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளனத்தின் தலைவர் கே.எஸ்.பி.ராஜேந்திரன் தமிழக முதல்-அமைச்சர். மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நெசவாளர்கள் இன்றளவும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

நெசவாளர்களுக்கு உற்பத்திக்கு முந்தைய செலவினங்களுக்கான தொகை 2012-ம் ஆண்டு வழங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக உற்பத்திக்கு முந்தைய செலவின தொகை பலமடங்கு உயர்ந்து விட்ட நிலையில், உடனடியாக நெசவாளர்களுக்கு குறைந்த பட்சம் 50 சதவீத அளவிற்கு உற்பத்திக்கு முந்தைய செலவின தொகையை உயர்த்தி வழங்க ஆவன செய்ய வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீடு

உற்பத்திக்கு முந்தைய செலவின தொகை சங்கங்களின் நிதி ஆதாரத்திலேயே வழங்கப்படுவதால் இதன் மூலம் அரசுக்கு எவ்வித நிதி செலவும் இல்லை.

கைத்தறி நெசவாளர்களுக்கு எந்த ஒரு மருத்துவ காப்பீட்டு திட்டமும் நடைமுறையில் இல்லை. நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானவர்களுக்கு சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்பு உள்ளது.

இதற்காக மாதந்தோறும் ரூ.500 முதல் 1,000 வரை செலவு செய்கின்றனர். எனவே உடனடியாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கைத்தறி ெநசவாளர்களை செயல்படுத்த வேண்டும். அதேபோல் நெசவாளர் பசுமை வீட்டு திட்டத்தையும் அமல்படுத்தி நெசவாளர் நலன் காக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story