விளக்கேத்தி ஊராட்சி மன்ற துணை தலைவருக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

விளக்கேத்தி ஊராட்சி மன்ற துணை தலைவருக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x

விளக்கேத்தி ஊராட்சி மன்ற துணை தலைவருக்கு கொலை மிரட்டல்; நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்

ஈரோடு

ஈரோடு

சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி ஊராட்சி மன்ற துணை தலைவர் சண்முகம் (வயது 55). இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவா் கூறி இருந்ததாவது:-

கடந்த 11-ந்தேதி ஓலப்பாளையத்தில் உள்ள ஊராட்சி தலைவர் சுப்பிரமணியின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் ஊர் பிரமுகர் ஆகியோர், கொலக்காட்டு பிரிவு பகுதியில் உள்ள நடைபாதையில் சிலர் மரத்தை வெட்டி போட்டு லாரி செல்வதை தடுப்பதாக எங்களிடம் கூறினார்கள். அதன்பேரில் நானும், ஊராட்சி தலைவரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, இங்கு யார் மரத்தை வெட்டி போட்டார்கள் என்று கேட்டோம்.

அதற்கு ஓலப்பாளையத்தை சேர்ந்த சிலர், தகாத வார்த்தையால் பேசி, நீ எல்லாம் துணை தலைவரா?, என கேட்டு எனது சாதி குறித்து இழிவாக பேசினார்கள். மேலும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்தில் கடந்த 12-ந்தேதி நான் புகார் அளித்தேன். அப்போது போலீசார் புகாரை பெற மறுத்து விட்டனர். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Related Tags :
Next Story