கலெக்டர் அலுவலகத்தில் செவிலிய உதவியாளர்கள் மனு


கலெக்டர் அலுவலகத்தில் செவிலிய உதவியாளர்கள் மனு
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் செவிலிய உதவியாளர்கள் மனு கொடுத்தனர்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த செவிலிய உதவியாளர்கள் (ஆஷா பணியாளர்கள்) தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதார நலத்திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் வாழ்வாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் உயர்த்தி அறிவித்த ரூ.1,000 ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய ரூ.500 மற்றும் கர்ப்பிணிகளை கண்டறிய ரூ.500 தொகையை உரிய அரசாணை பிறப்பித்து அளிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் தொகுப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story