திருச்செங்கோடுரிக் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


திருச்செங்கோடுரிக் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல்போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x
தினத்தந்தி 11 Jan 2023 6:45 PM GMT (Updated: 11 Jan 2023 6:47 PM GMT)
நாமக்கல்

திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

ரிக் உரிமையாளர்கள்

திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திரண்டு வந்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சங்கத்தில் கந்தம்பாளையத்தை சேர்ந்த பழனிவேல் என்பவர் உறுப்பினராக உள்ளார். அவரது வண்டியில் எலச்சிபாளையத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் ்உதவியாளராக வேலை செய்து வந்தார்.

இந்த வண்டியானது மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வந்தது. கடந்த 31-ந் தேதி தங்கவேல் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டார். இதுதொடர்பாக மத்தியபிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை முடிவில் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து தங்கவேல் குடும்பத்தினரிடம் எங்கள் சங்கம் மூலம் பேசியபோது ரூ.20 லட்சம் கொடுத்தால் தான் உடலை வாங்குவோம் என தெரிவித்தனர்.

கொலை மிரட்டல்

இதையடுத்து ஒரு அமைப்பினர் உதவியுடன் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். கடந்த 9-ந் தேதி இறந்தவரின் உடலை மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த போது உடலை வாங்க மறுத்து பிரச்சினை செய்தனர்.

இதற்கிடையில் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் விசாரணை செய்ததில் உடலை பெற்று கொள்வதாக குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். அப்போது குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் எங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அமைப்பை சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story