நாம்தமிழர் கட்சியினர் மனு
நாம்தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.
தமிழகம் முழுவதும் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் புனிதா தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் சசிகலா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்.இளங்கோ, மாவட்ட தலைவர் நாகூர் கனி, மேற்கு மாவட்ட செயலாளர் காமராசு, தலைவர் இசையரசன், நாடாளுமன்ற செயலாளர் குமரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கோஷமிட்டபடி வந்தனர்.
கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக வந்த அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் முக்கிய நிர்வாகிகள் சென்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.