மனுநீதி முகாம்


மனுநீதி முகாம்
x

கடையநல்லூர் அருகே மனுநீதி முகாம் நடைபெற்றது

தென்காசி

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா மடத்துப்பட்டி, புன்னைவனம், திருவேட்டநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் மனுநீதி முகாம் நடைபெற்றது.

தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி அனைவரையும் வரவேற்றார். மடத்துப்பட்டி பஞ்சாயத்து தலைவர் செய்யது இப்ராஹிம், புன்னைவனம் பஞ்சாயத்து தலைவர் பூமணி, திருவேட்டநல்லூர் பஞ்சாயத்து தலைவர் சுதா சங்கரநாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ராமர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 36 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டது. சமூக பாதுகாப்பு திட்டத்தில் 40 பயனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வாழ்நாள் முழுவதும் வழங்குவதற்கான ஆணை என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

இனைதொடர்ந்து அவர் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சிகளில் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜா மனோகரன், மாவட்ட வழங்கல் துணை கலெக்டர் சுதா, ஆதிதிராவிடர் நலத்துறை துணை கலெக்டர் கந்தசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் துணை கலெக்டர் குணசேகரன், தாசில்தார் அழகப்பராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியில் கடையநல்லூர் தாசில்தார் அரவிந்த் நன்றி கூறினார்.


Next Story