அரசு கல்லூரி முதல்வரிடம், பா.ம.க.வினர் மனு


அரசு கல்லூரி முதல்வரிடம், பா.ம.க.வினர் மனு
x
தினத்தந்தி 22 Jun 2023 1:00 AM IST (Updated: 22 Jun 2023 12:55 PM IST)
t-max-icont-min-icon

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் அணி செயலாளர் வக்கீல் விஜயராசா தலைமையில் நிர்வாகிகள் சேலம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமியிடம் மனு கொடுத்தனர்

சேலம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் அணி செயலாளர் வக்கீல் விஜயராசா தலைமையில் நிர்வாகிகள் சேலம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி முதல்வர் செண்பகலட்சுமியிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பல அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரப்பப்படாத இடங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கையின் போது, இடஒதுக்கீடு விதிகள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு போல் தான் இந்தாண்டும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இந்த செயலை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

இட ஒதுக்கீட்டு விதிகள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெளிவான வழிகாட்டுதல் வழங்கி உள்ளது.. எனவே கல்லூரி முதல்வர்கள், சிறப்பு கவனம் செலுத்தி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தாண்டு நிரப்பப்படாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடங்களை அரசு விதிமுறைப்படி சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

அப்போது கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட மாணவர் அமைப்பு செயலாளர் அருண்குமார், மாவட்ட செயலாளர் குமார் மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றனர்.


Next Story