வாய்க்கால்களில் முறையாக தண்ணீர் திறந்து விட கோட்டாட்சியரிடம் மனு


வாய்க்கால்களில் முறையாக தண்ணீர் திறந்து விட  கோட்டாட்சியரிடம் மனு
x

வாய்க்கால்களில் முறையாக தண்ணீர் திறந்து விட கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கரூர்

தமிழக காங்கிரஸ் விவசாயிகள் பிரிவு மற்றும் குளித்தலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில விவசாய அணி செயலாளர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், குளித்தலை வட்டார தலைவர் சீத.ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவியிடம் கோரிக்கை மனு ஒன்றை நேற்று அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

குளித்தலை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு தென்கரை வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் பாசன வசதி பெரும் வகையில் உள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக தண்ணீர் முறையாக திறந்து விடாததால் குளித்தலை பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கீழே போய்விட்டது. கரும்பு பயிர்கள் காப்பாற்ற முடியவில்லை. பெட்டவாய்த்தலை சர்க்கரை ஆலையும் இயங்காமல் போய்விட்டது. இதனால் குளித்தலை பகுதி விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வாழ்வாதாரமும் சீர் கெட்டு விட்டது. மேலும் தேவையான மழையும் இல்லாததால் தற்போது பயிர் செய்துள்ள கரும்பு, வாழை மற்றும் நெல் பயிர்களை காப்பாற்ற முறையாக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story