பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x

அரியலூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

அரியலூர்

மக்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதில் செந்துறை இருங்கலாகுறிச்சி கிராம மக்கள் அளித்த மனுவில், நாங்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலனி தெருவில் வசித்து வருகிறோம். ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பங்கள் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தி வருகிறோம். அருகில் உள்ள மாறாகுறிச்சி, ஆலத்தியூர் உள்ளிட்ட கிராமங்களில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் நாங்கள் சுமார் 15 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். இதுவரை எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. மாவட்ட கலெக்டர் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி எங்களுக்கு உதவ வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.


Next Story