முகநூலில் அவதூறு பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு


முகநூலில் அவதூறு பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு
x

முகநூலில் அவதூறு பதிவிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க தலைவர் குமரவேல் பாண்டியன், அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பி.எஸ்.குமார், நேதாஜி சுபாஷ் சேனை தொண்டர் அணி தலைவர் அமல்ராஜ் உள்ளிட்டோர் நேற்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், 'முகநூல் பக்கத்தில் ஒருவரது முகவரியில் சாதி பிரச்சினையை தூண்டும் வகையில் பதிவு போடப்பட்டுள்ளது. அதில் 2 சமுதாயத்தினர் குறித்து அவதூறாகவும், சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ள நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறிஉள்ளனர்.



Next Story