திசையன்விளை அருகே தனியார் மினி பஸ் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. காரணம் என்ன?


திசையன்விளை அருகே தனியார் மினி பஸ் மீது பெட்ரோல் குண்டுவீச்சு.. காரணம் என்ன?
x

திசையன்விளை அருகே தனியார் மினி பஸ் மீது பெட்ரோல் குண்டுவீசியது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திசையன்விளை:

திசையன்விளையில் இருந்து நவ்வலடி செல்லும் தனியார் மினி பஸ் நேற்று இரவு 10 மணியளவில் நவ்வலடியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் நிறுத்தப்பட்டு இருந்தது. பஸ் கண்டக்டர், டிரைவர் இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுவிட்டனர்.

அப்போது அந்த பஸ் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் பஸ் இருக்கைகள் முழுவதும் தீயில் எரிந்து நாசம் ஆனது. பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அந்த பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பெட்ரோல் குண்டுவீச்சுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து மிட்டாதார் குளத்தை சேர்ந்த மினி பஸ் உரிமையாளர் டென்சிங் உவரி போலீசில் புகார் செய்துள்ளார்


Next Story