தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குறைதீர்க்க கோரிக்கை பெட்டி- மனுக்கள் போட்டு பொதுமக்கள் தீர்வு காணலாம்


தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குறைதீர்க்க கோரிக்கை பெட்டி-  மனுக்கள் போட்டு பொதுமக்கள் தீர்வு காணலாம்
x

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் குறைதீர்க்க கோரிக்கை பெட்டி- மனுக்கள் போட்டு பொதுமக்கள் தீர்வு காணலாம்

ஈரோடு


தமிழ்நாடு அரசின் வீட்டுவசதித்துறை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வீட்டு வசதி வாரிய அலுவலகங்களில் குறைகள் தீர்க்கும் கோரிக்கை மனு பெட்டிகள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அதன்பேரில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகங்களில் கோரிக்கை மனு பெட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஈரோடு சம்பத்நகர் தியாகி குமரன் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஈரோடு பிரிவு அலுவலகத்தில் கடந்த 3-ந் தேதி கோரிக்கை மனு பெட்டி அமைக்கப்பட்டது.

மக்களின் குறைதீர்க்க முதல்-அமைச்சரின் முன்னெடுப்பு கோரிக்கை பெட்டி என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஈரோட்டில் 10-வது எண் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெட்டியில் வீட்டு வசதி வாரியத்தில் இருந்து பொதுமக்கள் பெறும் சேவைகளில் உள்ள குறைபாடுகள், வீடு, வீட்டுமனைகள் தொடர்பான சிக்கல்கள், பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து மனுக்கள் வழங்கலாம். முதல்-அமைச்சரின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ள இந்த பெட்டியில் போடப்படும் மனுக்கள் மீது உரிய தீர்வு எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story