இளம்அறிவியல் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு


இளம்அறிவியல் படிப்புக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:45 AM IST (Updated: 25 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.cc

கோயம்புத்தூர்
கோவை


கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.


இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-


2-ம் கட்ட கலந்தாய்வு


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்பில் பொது பிரிவினருக்கான, தனியார் கல்லூரிகளில் உள்ள 600 காலியிடங்களுக்கான 2-வது நேரடி கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலைவரை வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் நடைபெற உள்ளது.


இதற்கான கால அட்டவணை tnagfi.ucanapply.comஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பொதுபிரிவு மாணவர்களின் மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


சேவை மையம்


மாணவர்கள் இந்த குறுஞ்செய்தியை சரிபார்த்து 2-வது நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில், கலந்துகொள்ள தவறியவர்களுக்கு மறுபரிசீலனை செய்யப்பட மாட்டாது. மேலும் தகவல்களை உதவி சேவை மையத்தில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த கலந்தாய்வில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகம் செய்துள்ளது.



Next Story