2-ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் தொடக்கம்


2-ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் தொடக்கம்
x

வெம்பக்கோட்டை அருகே 2-ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே 2-ம் கட்ட அகழாய்வு பணி இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

வைப்பாறு வடகரை

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாறு விஜயகரிசல் குளம் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேடு பகுதியில், கடந்த ஆண்டு தொல்லியல் துறை சார்பில் முதல் கட்ட அகழாய்வு நடைபெற்றது.

அகழாய்வில் சங்குவளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் பதக்கம், அயல்நாட்டு வணிகத்திற்கு பயன்படுத்தப்பட்ட முத்திரைகள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தக்கூடிய தக்களி, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடு மண் அகல்விளக்கு, அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை, புகை பிடிப்பான் கருவி, சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய தாயக்கட்டைகள், விசில், சுண்ணாம்பு கலவை செய்ய பயன்படுத்தப்பட்ட மண்பானைகள் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

2-ம் கட்ட அகழாய்வு

இந்தநிலையில் 2-ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

முதல் கட்ட அகழாய்வின் முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயாரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும், இங்கு தயாரான சங்கு வளையல்களை வெளிநாடுகளுக்கு கடல் வழியாக வணிகம் செய்ததற்கான சான்றாக பல்வேறு தடயங்களும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் பல அரிய தகவல்களை 2-ம் கட்ட அகழாய்வு மூலம் அறிய வாய்ப்பிருப்பதாக தொல்லியல் துறையினர் கூறினர்.


Next Story