வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு; 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு


வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு; 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
x

வெம்பக்கோட்டையில் நடந்த 3-ம் கட்ட அகழ்வாய்வில் 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 3-ம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அகழாய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்கு வளையல் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் கண்ணாடி மணிகள், கல்மணிகள், பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சுடு மண்ணாலான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு, எலும்புகள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


1 More update

Next Story