தர்மபுரியில் மத்திய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
தர்மபுரி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள மாவட்ட பா.ஜ.க. பழைய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில் மத்திய அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்கள், மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி உதவி மற்றும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளர் காவேரிவர்மன், மாவட்ட துணை தலைவர் சோபன், கல்வியாளர் பிரிவு மாநில துணை தலைவர் அருணகிரி, மாவட்ட தலைவர் இமானுவேல், நகர தலைவர் ஜிம் சக்திவேல், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் மாவட்ட தலைவர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் குமார், விவசாய பிரிவு தலைவர் ராஜசேகர், மண்டல தலைவர்கள் பழனிசாமி, மாதன், கணபதி, நாகராஜ், பசுபதி, ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.