முதல்-அமைச்சரின் புகைப்பட கண்காட்சி - ஆர்வத்துடன் பார்வையிட்ட மருமகன், பேரன், பேத்திகள்


முதல்-அமைச்சரின் புகைப்பட கண்காட்சி - ஆர்வத்துடன் பார்வையிட்ட மருமகன், பேரன், பேத்திகள்
x

புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சரின் மருமகன் சபரீசன் தனது மகன் மற்றும் மகளுடன் வந்து பார்வையிட்டார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் குழந்தைப் பருவம் முதல் தற்போது வரையிலான பல்வேறு காலகட்டங்களின் புகைப்படங்கள், அரசியல் தலைவர்களுடனான புகைப்படங்கள், மிசா சிறைவாசத்தின் மீள் உருவாக்கம் உள்ளிட்டவை அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த கண்காட்சியின் நிறைவு நாளான இன்று, முதல்-அமைச்சரின் மருமகன் சபரீசன் தனது மகன் மற்றும் மகளுடன் வந்து பார்வையிட்டார். அப்போது அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர். அங்குள்ள புகைப்படங்கள் குறித்து முதல்-அமைச்சரின் பேரன், பேத்திகளுக்கு அவர்கள் விளக்கிக் கூறினர்.Next Story