நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி


நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
x

நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பொதுமக்கள் பார்வையிட வைக்கப்பட்டிருந்தன. புகைப்பட கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு செயல்படுத்திய நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இப்புகைப்பட கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டனர்.

1 More update

Next Story