மறியல் போராட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 38 பேர் கைது


மறியல் போராட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 38 பேர் கைது
x

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். படித்த இளைஞர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும். பால், தயிர் உள்ளிட்ட உணவு பண்டங்கள் மீது சேவை மற்றும் சரக்கு வரியை ரத்து செய்ய வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். சொத்துவரி உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடந்தது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம் பகுதியில், பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. இதில், கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 37 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story