புதிதாக அமைக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தை அகற்றக்கோரி மறியல்


புதிதாக அமைக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தை அகற்றக்கோரி மறியல்
x

அறந்தாங்கியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆட்டோ நிறுத்தத்தை அகற்றக்கோரி ஆட்டோ சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

மறியல்

அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 இடங்களில் ஆட்டோ நிறுத்தம் அமைத்து 150-க்கு மேற்பட்ட ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். இதில் பஸ் நிலையத்திற்குள் செல்லும் வழியில் புதிதாக ஆட்டோ நிறுத்தம் உருவானதை அகற்றக்கோரி அதிகாரியிடம் கூறியும், பேச்சுவார்த்தை நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ சங்கத்தினர் பஸ் நிலையம் முன்பு அறந்தாங்கி போலீசார் மற்றும் அதிகாரிகளையும் கண்டித்து மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால் அறந்தாங்கி பஸ் நிலைய சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story