பெண்ணின் படம் தவறாக சித்தரிப்பு


பெண்ணின் படம் தவறாக சித்தரிப்பு
x

ஆன்லைன் மூலம் கடன் பெற்ற பெண்ணின் படத்தை தவறாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை

சிவகங்கை,

ஆன்லைன் மூலம் கடன் பெற்ற பெண்ணின் படத்தை தவறாக சித்தரித்து உறவினர்களுக்கு அனுப்பியவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் கொடுத்த புகாரில் கூறி உள்ளதாவது:-

நான் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைனில் கடன் தருவதாக வந்த விளம்பரத்தை நம்பி குடும்ப தேவைக்காக பணம் வாங்கி இருந்தேன்.

அந்த பணத்தை கட்டியும் வந்துள்ளேன். நான் சரியாக பணம் கட்டவில்லை என்று கூறி கடன் கொடுத்தவர்கள் என்னுடைய படத்தை தவறாக சித்தரித்து என் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டுகின்றனர்.

விசாரணை

எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரன்பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் விமலா சப்-இன்ஸ்பெக்டர் முத்துமுனியசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story