கொல்லிமலை சாலையில் சுற்றுலா பயணிகளை கவரும் ஓவியம்


கொல்லிமலை சாலையில்  சுற்றுலா பயணிகளை கவரும் ஓவியம்
x

கொல்லிமலை சாலையில் சுற்றுலா பயணிகளை கவரும் ஓவியம்

நாமக்கல்

சேந்தமங்கலம்:

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொல்லிமலையில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதியில் சாலையோரத்தில் செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொண்டை ஊசி வளைவு பகுதியில் விபத்துக்களை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் மற்றும் பாலங்களுக்கு வெள்ளை அடித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அங்குள்ள சுவற்றின் மீது வல்வில் ஓரி மன்னன் விட்ட ஒரே அம்பால் யானை, புலி, மான், பன்றி, உடும்பு ஆகியவற்றை வரிசையாக கொல்வது போல் போன்ற ஓவியமும் வரையப்பட்டுள்ளது.


Next Story