கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் புறா பந்தயம்
கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் புறா பந்தயம் நடந்தது.
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் கரூர் நகர நண்பர்கள் சார்பில் 2-ம் ஆண்டு புறா போட்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. கர்ண புறா போட்டி நேற்று தொடங்கியது. இதில் 15-க்கும் மேற்பட்ட புறாக்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு புறாக்களை பறக்க விட்டனர். இப்போட்டியை அன்பு மற்றும் காமராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது இந்த கர்ண புறா வெள்ளை நிற கண்களாக இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் வானில் பறக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு கரணம் அடிப்பதை காட்ட வேண்டும். மூன்று நாட்களில் எந்த புறா வெகு நேரம் வானில் பறக்கிறதோ அந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெறும் புறாக்களுக்கு முதல் பரிசாக ரூ.12 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.9 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.6 ஆயிரமும் வழங்கப்பட உள்ளன. சாதா புறா போட்டி வருகின்ற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது.