புறா பந்தயம்


புறா பந்தயம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரியில் புறா பந்தயம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி ஸ்டார் ரேஸிங் பிஜியன் கிளப் சார்பில் சென்னை முதல் ஆறுமுகநேரி வரையிலான புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 75 புறாக்கள் கலந்து கொண்டது.

சென்னை வண்டலூரில் இருந்து ஆறுமுகநேரி வரையிலான 600 கிலோமீட்டர் தூரத்தை 9 மணி நேரம் 24 நிமிடம் 40 வினாடிகளில் கடந்து வந்து ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் வடக்கு தெரு ஜோஸ் வினிஸ்டன் என்பவரது புறா முதல் இடத்தையும், அவரது மற்றொரு புறா 13 மணி 19 நிமிட நேரத்தில் கடந்து வந்து 2-வது இடத்தையும் பிடித்தது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை புறா பந்தய கிளப் தலைவர் நாராயணன், செயலாளர் ராஜ், பொருளாளர் பட்டு ராஜா ஆகியோர் செய்திருந்தனர். வெற்றி பெற்ற புறாக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story