நெற்பயிர்களை சேதப்படுத்திய பன்றிகள்


நெற்பயிர்களை சேதப்படுத்திய பன்றிகள்
x

வத்திராயிருப்பு அருகே நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே நெற்பயிர்களை பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

அறுவடைபணிகள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில்அய்யாசாமி என்பவரது விவசாய நிலத்தை பூபதி என்பவர் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். அப்பகுதியில் வளர்க்கப்படும் வளர்ப்பு பன்றிகள் அடிக்கடி விவசாய நிலத்திற்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

நிவாரணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் நெல்லை சாகுபடி செய்துள்ளோம். தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.

இந்தநிலையில் வயலுக்குள் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story