கள்ளக்குறிச்சி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


கள்ளக்குறிச்சி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 13 Aug 2023 6:45 PM GMT (Updated: 13 Aug 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கள்ளக்குறிச்சி


பத்ரகாளியம்மன் கோவில்

கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு பின்புறம் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் நேற்று 108 பால்குடம், 108 அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு கோட்டைமேடு கோமுகி நதிக்கரையில் இருந்து பெண் பக்தர்கள் 108 பால்குடம் மற்றும் 108 அக்னி சட்டி ஏந்தி மேளதாளத்துடன் கச்சேரி சாலை, நான்குமுனை சந்திப்பு, சேலம் மெயின் ரோடு, சிதம்பரம்பிள்ளை தெரு வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மயானக்கொள்ளை

இதையடுத்து மதியம் 2 மணிக்கு மயான கொள்ளை விழா நடைபெற்றது. அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்கள் சேவல் மற்றும் ஆட்டின் கழுத்தை கடித்து ரத்தம் குடித்தபடி ஊர்வலமாக மயானம் நோக்கி சென்றனர். அதன்பிறகு நடந்த மயானக் கொள்ளை விழாவில் அம்மனுக்கு படைக்கப்பட்ட சாதம் மற்றும் மொச்சை போன்றவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர். இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story