குன்னூரில், உலா வரும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு


குன்னூரில், உலா வரும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு
x
தினத்தந்தி 11 Aug 2023 12:15 AM IST (Updated: 11 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூரில், உலா வரும் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி

குன்னூர்: குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சேலாஸ் கக்காச்சி குடியிருப்பு பகுதியில் ஒற்றை கரடி உலா வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதுகுறித்து குந்தா வனத்துறையினருக்கு புகார் அளித்தனர். மேலும் கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க குந்தா வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை இரவு, பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story