திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் புதன்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோட்டம் மற்றும் கோவில்பட்டி பகுதியில் இன்று(புதன்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சேதமடைந்த மின்கம்பங்கள்
திருச்செந்தூர் கோட்ட மின் விநியோக செயற்பொறியாளர்
விஜயசங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் சரிசெய்தல் போன்ற பணிகள் இன்று(புதன்கிழமை) மேற்கொள்ளப்பட இருக்கிறது. எனவே, ஆலந்தலை, கந்தசாமிபுரம், கணேசபுரம், கல்லாமொழி, நத்தைக்குளம், ராணிமகாராஜபுரம், தைக்காவூர், நைனாபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சியோன்நகர், பிச்சிவிளை, மானாடு, நா. முத்தையாபுரம், நாலுமூலைக்கிணறு, வட்டன்விளை, செட்டிவிளை, சோலைகுடியிருப்பு, குருநாதபுரம், ஓடக்கரை, பூந்தோட்டம், லெட்சுமிபுரம், புதூர், நாலுமாவடி, வீரமாணிக்கம், இடையன்விளை, புறையூர், மணத்தி, குருகாட்டூர், தென்திருப்பேரை, ராஜபதி, சேதுக்குவாய்த்தான், சுப்பிரமணியபுரம், காமராஜ்நகர் (சாத்தான்குளம்), தோப்புவளம், பண்டாரபுரம், புதுக்குளம், அமுதுண்ணாகுடி, ஆலங்கிணறு, சங்கரன்குடியிருப்பு, கொம்பன்குளம், தஞ்சைநகரம், அம்பலச்சேரி, தேர்க்கன்குளம், பழனியப்பபுரம், சின்னமாடன்குடியிருப்பு, உடையார்குளம், குறிப்பன்குளம், ஆழ்வார்திருநகரி, நவலட்சுமிபுரம், லெட்சுமிபுரம், மருதுர்கரை, குமாரசாமிபுரம், சிவலுர், கொட்டங்காடு, குலசை, மணப்பாடு, பண்டாரஞ்செட்டிவிளை, புதுமனை, வெள்ளிகுடியிருப்பு, சமத்துவபுரம், கடாட்சபுரம், சொக்கலிங்கபுரம், மெய்யூர், படுக்கப்பத்து, அழகப்பபுரம், பிச்சிவிளை, அம்பாள்குளம், கருமாவிளை, சுண்டங்கோட்டை, உடைபிறப்பு, பிரகாசபுரம், இடைச்சிவிளை, பூச்சிக்காடு விளக்கு ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி
இதேபோன்று, கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின்பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் இன்று(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. எனவே, இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை
கோவில்பட்டி துணை மின் நிலையத்தின் நான்கு வழிச்சாலையில் உள்ள பாலாஜி நகர், மீனாட்சி நகர் பகுதிகள், விஜயாபுரி துணை மின் நிலையத்தின் துரைசாமிபுரம், கிழவிப்பட்டி, கெச்சிலாபுரம், செண்பகப்பேரி, மேல பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, அண்ணாமலை நகர், அன்னை தெரசா நகர், இ.பி.காலனி, ராஜூவ் நகர் மேற்கு பகுதி, ஊத்துப்பட்டி, வெங்கடாசலபுரம், குருமலை, கழுகாசலபுரம், மும்மலைப்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
கழுகுமலை
மேலும், எம். துரைசாமி புரம் உபமின் நிலையத்தின் மூலம் மின்வினியோகம் பெறும் வானரமூட்டி, வெயிலு கந்தபுரம், காளாம்பட்டி, காலாங்கரைப்பட்டி, சங்கரலிங்க புரம், கெச்சிலாபுரம் ஆகிய பகுதிகளிலும், எட்டயபுரம் உபமின் நிலையத்தின் மூலம் மின் வினியோகம் பெறும் கருப்பூர், அருணாசல புரம், வீரப்பட்டி, கோட்டூர், கீழ் நம்பியாபுரம், மேல நம்பியாபுரம் பகுதிகளிலும், கழுகுமலை உபமின் நிலையத்தின் மூலம் மினி வினியோகம் பெறும் தெற்கு கழுகுமலை, வெங்கடேஸ்வரபுரம், துரைச்சாமிபுரம் பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.