கவுன்சிலர்களுக்கு திட்டமிடல் பயிற்சி முகாம்


கவுன்சிலர்களுக்கு திட்டமிடல் பயிற்சி முகாம்
x

நெல்லையில் கவுன்சிலர்களுக்கு திட்டமிடல் பயிற்சி முகாம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் தமிழ்நாடு நகர்புற முதன்மை முதலீட்டு திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் குறித்து கவுன்சிலர்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம், நகராட்சி நிர்வாக ஆணையரகம் மூலம் நடைபெற்றது. இதில் நகர்புற திட்டமிடுதல், நில பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி கட்டிடங்கள் கட்டுதல், சாலைகள், தெருவிளக்கு பராமரிப்பு, பாலங்கள் உள்பட பல்வேறு பிரிவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் மண்டல தலைவர்கள் ரேவதி பிரபு, மகேசுவரி, கதிஜா இக்லாம் பாசிலா, உதவி ஆணையாளர் (கணக்கு) சொர்ணலதா, கவுன்சிலர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுனர் பிரகாஷ் நாயக், சமூக வல்லுனர் சதீஷ், டாக்டர் விஜயலட்சுமி, திட்ட மேலாளர் ஜெய ரஞ்சன்சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story