பிறந்த நாளில் மரக்கன்று நடுங்கள்
பிறந்த நாள் விழாவின்போது மரக்கன்று நடுங்கள் என்று வன உயிரின வாரவிழா போட்டியை தொடங்கிவைத்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.
மாணவ-மாணவிகளுக்கு போட்டி
தேசிய வன உயிரின வாரவிழாவை முன்னிட்டு வனத்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகியவை திருப்பத்தூர் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மரக்கன்று நடுங்கள்
வன உயிரின வாரவிழா கொண்டாடுவதன் நோக்கம் வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். வெப்பநிலை அதிகரிக்க முக்கிய காரணம் மரங்களை வெட்டி அழிப்பது தான். கடந்த 20, 30 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்து உள்ளது.
போதுமான அளவு ஆற்று நீர் கடலில் கலந்தால்தான் கடலோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புத்தன்மை குறையும். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாடுகின்ற பொழுதும் ஒரு மரக்கன்று நடுங்கள். வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் செடிகளை பரிசளியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர்கள் இளங்கோ, பாபு, குமார், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.