மசினகுடியில் காட்டுத்தீ பரவிய இடங்களில் 1,500 மூங்கில் நாற்றுகள் நடும் பணி -வனத்துறையினர் நடவடிக்கை


மசினகுடியில் காட்டுத்தீ பரவிய இடங்களில் 1,500 மூங்கில் நாற்றுகள் நடும் பணி -வனத்துறையினர் நடவடிக்கை
x

மசினகுடியில் காட்டுத்தீப் பரவிய இடங்களில் 1,500 மூங்கில் நாற்றுகளை நடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

மசினகுடியில் காட்டுத்தீப் பரவிய இடங்களில் 1,500 மூங்கில் நாற்றுகளை நடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

காட்டுத்தீயில் எரிந்த மூங்கில்கள்

கூடலூர், மசினகுடி பகுதியில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பால் வனப்பகுதியில் வறட்சியாக காணப்பட்டது. இதனால் பல இடங்களில் காட்டுத்தீ பரவியது. இதேபோல் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் வறட்சி நிலவியது. அப்போது மரவ கண்டி பகுதியிலும் 2 மாதங்களுக்கு முன்பு பயங்கர காட்டுத் தீ பரவியது.

இதன் காரணமாக அப்பகுதியில் நின்றிருந்த காய்ந்த போன மூங்கில்கள் தீக்கிரையானது. தொடர்ந்து அதன் விதைகளும் தீயில் கருகிப் போனது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு எதிர்காலத்தில் பசுந்தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனால் ஊருக்குள் வன விலங்குகள் அதிகளவு வரும் அபாயம் இருந்தது. இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தின விழா மசினகுடி வனத்துறை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

1,500 மூங்கில் நாற்றுகள் நடும் பணி

வனச்சரகர் பாலாஜி தலைமை தாங்கினார். வனவர் சித்தராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் மசினகுடி பகுதி டிரைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது 1, 500 மூங்கில் நாற்றுகள் காட்டு தீ பரவிய மரவகண்டி பகுதியில் நடும் பணி தொடங்கப்பட்டது. இதுகுறித்து வனச்சரகர் பாலாஜி கூறியதாவது:-

காட்டுத் தீயில் மூங்கில்கள் முழுமையாக எரிந்து விட்டது. இதனால் காட்டு யானைகளின் விருப்ப உணவாக உள்ள மூங்கில் நாற்றுகள் மீண்டும் அப்பகுதியில் வளரும் வகையில் நடும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 1,500 நாற்றுகள் சுமார் ½ கி.மீட்டர் தூரத்துக்கு நடப்பட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் மழை பெய்யும் என்பதால் கூடுதலாக 2,500 நாற்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூங்கில் காடுகள் பெருகி காட்டு யானைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளிக்கூட குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story