தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 July 2023 1:09 AM IST (Updated: 23 July 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்தியா முழுவதும் 16 தேசிய பேரிடர் மீட்பு படை மைய வளாகங்களில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன்படி சென்னை, புதுச்சேரி, கேரளா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 4-வது தேசிய பேரிடர் மீட்பு படை மையமான அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வளாகத்தில் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் மற்றும் இணை கமாண்டன்ட் சுதாகர் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

இதில் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை பேரிடர் மீட்பு படை மைய வளாகத்தில் நட்டனர்.

1 More update

Next Story