சாலையில் நாற்று நடும் போராட்டம்


சாலையில் நாற்று நடும் போராட்டம்
x

அனேரி கிராமத்தில் பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த அனேரி கிராமத்தில் மண் சாலை அமைந்துள்ளது. இங்கு தார்ச்சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில், சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இந்தச் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும், சகதியுமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நேற்று அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளி மாணவ, மாணவியகளுடன் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திருப்பத்தூர்-திருவண்ணாமலை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர் பள்ளி குழந்தைகளும் கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சென்று போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story