சூரி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா


சூரி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
x

சூரி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூர் மெயின் ரோட்டில் சூரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செடில் திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலை விக்னேஸ்வர பூஜை, ருத்திரஅபிசேகம், சக்்தி கரகம், வாஸ்துசாந்தி ஆகியவை நடந்தது. தொடர்ந்து இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள், பெண்கள் கலந்துகொண்டு கூடையில் பூக்களை கொண்டு வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சூரி மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story