பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்


பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம்
x

சோளிங்கரில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம்சார்பில் தனியார் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கருமாரியம்மன் கோவில் கூட்டு சாலையில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையம் வழியாக சென்று தபால் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இதில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், உருஞ்சுகுழாய்கள் ஒழிப்போம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், கோஷங்கள் எழுப்பி சென்றனர். முன்னதாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என உறுதி மொழி ஏற்றனர். ஊர்வலத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story