பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊா்வலம்
மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊா்வலம்
மயிலாடுதுறை
மத்திய அரசின் புனித்சாகர் அபியான் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் ரோட்ராக்ட் சங்கங்களின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை நகரசபை துணைத்தலைவர் சிவக்குமார் ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் செல்வநாயகம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் மாயூரநாதர் கோவில் மேலவீதி, தெற்கு வீதி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், புதுத்தெரு, தரங்கம்பாடி சாலை வழியாக சென்று தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தை அடைந்தது.
Related Tags :
Next Story